For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியர்களே பிடிக்காது.. நான் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்..!! -  யூடியூபர் பேச்சால் சர்ச்சை

British YouTuber Miles Routledge has created controversy by saying, 'I am the Prime Minister of Britain but I will drop a nuclear bomb on India
04:49 PM Aug 23, 2024 IST | Mari Thangam
இந்தியர்களே பிடிக்காது   நான் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்        யூடியூபர் பேச்சால் சர்ச்சை
Advertisement

பிரிட்டனைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்ற யூடியூபர், 'நான் பிரிட்டன் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்', எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் இந்தியா உட்பட நாடுகள் மீது அணுகுண்டு வீசப்போவதாகக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்பவர் தான் இந்தச் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் பிரிட்டன் பிரதமரானால்.. பிரிட்டிஷ் நலன்களில் தலையிடும் எந்தவொரு வெளிநாட்டுச் சக்திக்கும் வெளிப்படையாக எச்சரிப்பேன். சம்பந்தப்பட்ட நாடுகள் மீது அணு குண்டுகளை வீசிவிடுவேன். பெரிய விதிமீறல்கள் குறித்து நான் பேசவில்லை. மிகச்சிறிய சிறியளவில் நமது நாட்டிற்குத் தொல்லை கொடுத்தாலும் அணு குண்டு வீசிவிடுவேன்" என்று கூறியிருந்தார்.

மேலும், தான் பிரதமராக இருந்தால் இந்தியா மீது அணு குண்டை வீசிவிடுவேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள்.. எனக்கு இந்தியாவைச் சுத்தமாகப் பிடிக்காது. என்னால் இந்தியர் அருகே வந்தாலே உணர முடியும்.. இந்தியர் அவ்வளவுதான் என மிக மோசமான இனவெறி கருத்துகளையும் கூறியிருக்கிறார்.. அவரது இந்த போஸ்ட்கள் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், அதை அவர் டெலிட் செய்துவிட்டார். இருப்பினும், சில நெட்டிசன்கள் இதனை ' ஸ்க்ரீன்ஷாட் ' எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இந்தியா மீது அணு குண்டு போடுவேன் என்றும் இந்தியா குறித்து இனவெறி கருத்துகளையும் சொன்ன இவருக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள்.

Read more ; ஓய்வை அறிவித்த கே.எல்.ராகுல்? பரபரப்பைக் கிளப்பிய இன்ஸ்டா பதிவு..!! உண்மை என்ன?

Tags :
Advertisement