"போரை நிறுத்துங்கள்..!!" பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்..!!
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதுதான் இந்த போரின் தொடக்கம்.. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கமாக கொண்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.
போர் தொடங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக இஸ்ரேலுக்கு அறிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.
இதில், "சண்டை முடிவுக்கு வர வேண்டும். ஹமாஸால் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பண உதவிகளும் விடுவிக்கப்பட வேண்டும். காசா மக்களுக்கு அவசர உதவி தேவை. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். தொடக்க காலங்களில், போர் நிறுத்தம் தொடர்பாக ஐநாவில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது அதற்கு எதிராக இந்த நாடுகள் வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; ‘பிணத்தை கூட விட்டு வைக்கல..!!’ சடலத்தை தோண்டி உடலுறவு செய்த கொடூர நபர் கைது..!!