For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நான் இருக்கும்போதே இன்னொரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து”..!! சண்டை பயிற்சியாளரின் மனைவி கதறல்..!!

01:14 PM Apr 17, 2024 IST | Chella
”நான் இருக்கும்போதே இன்னொரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து”     சண்டை பயிற்சியாளரின் மனைவி கதறல்
Advertisement

திரைப்பட சண்டை பயிற்சியாளராக இருக்கும் ஜாகுவார் தங்கம், சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணால் காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது மனைவி சாந்தி. இவர், தனது கணவர் ஜாகுவார் தங்கம் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ”நான் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் ஜாகுவார் 23 வயது பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். கடந்த 15ஆம் தேதி அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு, என்னையும், எனது மகன்களையும் வெளியே அனுப்பிவிட்டார். எனவே, புகாரை விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், முதலில், சாந்தியிடம் விசாரித்தனர். பின்னர், அவர் அளித்த தகவலின் பேரில், மகன்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜாகுவார் தங்கத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக சாந்தியால் குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கத்தின் மனைவி காவல்நிலையத்தில் இப்படியொரு குற்றச்சாட்டை கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாகிறதா..? அசால்ட்டா இருக்காதீங்க..!! வெடிக்கும் அபாயம்..!!

Advertisement