முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த உணவுகளை கட்டாயமாக சாப்பிட வேண்டும்.?

07:14 AM Jan 25, 2024 IST | 1newsnationuser5
Advertisement

குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதம் ஆகும் வரை தாய்ப்பால் தான் கட்டாயமாக கொடுக்க வேண்டும். ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் வாயில் இனிப்பு தண்ணீர் வைப்பது, குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களில் தாய்ப்பால் தவிர தண்ணீர் தருவது போன்ற பழக்கங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.

Advertisement

மேலும் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியான அளவில் இருக்காது. இதை ஒரு சில உணவு முறைகளின் மூலமும், பழக்கவழக்கங்களின் மூலமும் சரி செய்யலாம். குழந்தையை அடிக்கடி தூக்கி வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது தவறான விஷயமாகும். பிறந்த குழந்தையை அடிக்கடி தாயின் அரவணைப்பில் வைத்திருப்பது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மேலும் தாய்க்கும் தாய்ப்பால் பெருகும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் கர்ப்ப காலத்தில் அந்த பெண்ணை எந்த அளவிற்கு பார்த்துக் கொண்டார்களோ அதே அளவிற்கு குழந்தை பிறந்த பின்பும் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் உண்ணும் உணவு அவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைக்கும் தாய்ப்பாலின் வழியாக ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதன்படி தாய்மார்கள் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாகும் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. ஒரு சில வீடுகளில் புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு பழங்களை சாப்பிட தர மாட்டார்கள். இது தாய்க்கும், குழந்தைக்கு சளி தொல்லை ஏற்படுத்தும் என்று கருதி வருகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. தாய்மார்கள் கண்டிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழம் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பெண்களுக்கு இந்த நேரத்தில் அதிகமான செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
3. இரும்பு சத்தை அதிகரிக்கும் கொண்டைக்கடலை, பச்சை பயிறு, வேகவைத்த நிலக்கடலை போன்ற தானிய வகைகளை வேக வைத்து சாப்பிடலாம்.
4. கொழுப்பு சத்து நிறைந்த அசைவ உணவுகள் மற்றும் மீன்களை எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பாலில் ஊட்டச்சத்து பெருகுகிறது.
5. குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அந்த நேரத்தில் முதுகு வலி, உடல் வலி, வயிற்று வலி அதிகமாக இருக்கும். எனவே உளுந்து, எள்ளு போன்றவைகளை உணவாக சமைத்து உண்ணலாம். இது தாய்பாலையும் அதிகரிக்கும்.

Tags :
BreastfeedingfoodWomens
Advertisement
Next Article