BREAKING | ’நேற்று தடை... இன்றே வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு’..!! என்ன காரணம்..?
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதனால், காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த வெப்ப அலையால் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்களை தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஹீட் ஸ்ட்ரோக் மூலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இதனை தவிர்க்கும் விதமாக அதிக வெப்பம் நிலவும் காலை 10 முதல் மாலை 4 வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எந்த வகையான திறந்த வெளி கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே தமிழ்நாடு அரசு விலக்கிக் கொண்டது. வெயின் தாக்கம் குறைந்து, மழை பெய்து வருவதால், அந்த தடை நீக்கப்பட்டதாக அதிகாலையிலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read More : சாப்பிட்ட உடன் டீ, காஃபி குடிப்பதால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இனியும் இந்த தவறை பண்ணாதீங்க..!!