BREAKING | வயநாடு நிலச்சரிவு..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி..!! பினராயி விஜயன் அறிவிப்பு..!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை நிறைவடைந்தது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
121 ஆண்கள், 127 பெண்கள் உள்பட 248 பேரின் 349 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
இதில், 52 உடல் பாகங்கள் சிதைந்துள்ளதால், கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும் என அம்மாநில வருவாத்துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார். மேலும், இம்மாத இறுதிக்குள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50,000, முகாம்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.6,000 வாடகை உதவித்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், 60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75,000 நிதியுதவியும், 40 - 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Read More : மின் கட்டணம் செலுத்திவிட்டீர்களா..? மீண்டும் வரும் மெசேஜ்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!