BREAKING | திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை..!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!
திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. வருகிற 13ஆம் தேதி கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2,668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் 2 இடங்களில் ஒரே நாளில் மண்சரிவு ஏற்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் மலையேறி செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பக்தர்களிடம் எழுந்தது.
இந்நிலையில் தான், திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றும் பக்தர்கள் மட்டுமே கட்டுப்பாடுகளோடு மலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம், கோயிலுக்கு வரும் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபுவின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Read More : இதை மட்டும் சாப்பிடுங்க..!! உங்களுக்கு சப்போட்டாக இருக்கும் சப்போட்டா பழம்..!! இவ்வளவு நன்மைகளா..?