BREAKING | சொந்த கட்சி கவுன்சிலர்களே அடுக்கடுக்கான புகார்..!! மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன்..?
நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட சரவணன், நெல்லையின் திமுக அடையாளமாக இருந்தார். ஆனால், அவர் மீது சொந்த கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் திமுக தலைமை நேரடியாக தலையிட்டதால், அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை மாநகராட்சியின் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடு பல மாதங்களாக மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்டமாக அமைச்சர் கே.என்.நேருவை கவுன்சிலர்கள் நேரடியாக சந்தித்து மேயர் மீது புகார் அளித்திருந்தனர்.
அடுத்த கட்டமாக மாநகராட்சி மேயர் சரவணன் மாமன்ற உறுப்பினர்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. பல கோப்புகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை மாற்ற வேண்டுமென 45 மாமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் தான், தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.