BREAKING | திடீர் திருப்பம்..!! மத்தியில் ஆட்சி அமைக்கிறது INDIA கூட்டணி..!! பக்கா பிளான் போட்ட காங்கிரஸ்..!!
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் பாஜக 294, காங்கிரஸ் கட்சி 232 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தவரை திமுக 39 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக, நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
இந்நிலையில் தான், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தொலைபேசியில் உரையாடி உள்ளார். அப்போது, இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ள நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.
Read More : ’தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி’..!! ஆந்திர அரசியலை திருப்பிப் போட்ட அந்த கைது..!!