For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#BREAKING | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே..!! ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி அறிவிப்பு..!!

05:39 PM Feb 15, 2024 IST | 1newsnationuser6
 breaking   பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே     ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி அறிவிப்பு
Advertisement

விரைவில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement