முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ரோகித் சர்மா..!! புதிய கேப்டனாக பும்ரா நியமனம்..!!

Bumrah has been appointed captain for the final Test match against Australia.
04:06 PM Jan 02, 2025 IST | Chella
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும் என்ற சூழலில் இந்தியா உள்ளது.

Advertisement

எனவே, இந்த போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, தொடரில் இடம்பெற்றிருந்த அஸ்வின் 3-வது போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஓய்விற்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்று சர்ச்சைகள் வெடித்தன. மேலும், கம்பீரின் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

மறுபுறம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீதும் பெரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் தொடர்ச்சியாக மோசமான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடப்பு பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு அரை சதம் கூட இதுவரை அடிக்கவில்லை. இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதால், அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், ரோகித் சர்மா வகித்து வந்த கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு வழங்கப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்படுவார்.

Read More : ”இப்போது வரை நான் கண்ணகியாகதான் வாழ்ந்து வருகிறேன்”..!! ”அவரைப் பற்றிப் பேசவே எனக்கு விரும்பவில்லை”..!! நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

Tags :
கேப்டன் பதவிபும்ராரோகித் சர்மா
Advertisement
Next Article