முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

With the Pongal festival to be celebrated on the 15th, the Tamil Nadu government has announced a bonus for government employees.
04:29 PM Jan 02, 2025 IST | Chella
Advertisement

பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம் உள்ளிட்டவை பெறும் முழு, பகுதிநேரப் பணியாளர்களுக்கு ரூ.1,000 போனஸ் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவை சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read More : BREAKING | கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ரோகித் சர்மா..!! புதிய கேப்டனாக பும்ரா நியமனம்..!!

Tags :
Pongal Bonusஅரசு ஊழியர்கள்தமிழ்நாடு அரசுபொங்கல் போனஸ்முதலமைச்சர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article