முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

#BREAKING | தமிழ்நாட்டில் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்"..!! முதல் அறிக்கையிலேயே அட்டாக் செய்த விஜய்..!!

01:31 PM Feb 02, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நடிகர் விஜய் புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இது டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவும் செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில், அரசியல் கட்சி பதிவு செய்ததும் முதன்முதலாக விஜய் விடுத்துள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம்” பல ஆண்டுகளாக தன்னால் இயன்ற பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போதைய அரசியலில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒரு புறம் என்றால், நம் மக்களை சாதி, மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம் உள்ளது.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, லஞ்ச, ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியான தான் சாத்தியப்படுத்த முடியும்.

எனவே, தமிழ்நாடு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரை, உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு , இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
தமிழக வெற்றி கழகம்தேர்தல் ஆணையம்நடிகர் விஜய்
Advertisement
Next Article