For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

G.O.A.T: செம மாஸ்.! போஸ்டரே வெறி ஏத்துது.! வெளியான தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் .!

06:21 PM Dec 31, 2023 IST | 1newsnationuser4
g o a t  செம மாஸ்   போஸ்டரே வெறி ஏத்துது   வெளியான தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கோவா, சரோஜா, மங்காத்தா, மாநாடு ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கஸ்டடி என்ற திரைப்படம் வெற்றி பெறவில்லை.

Advertisement

இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவரான தளபதி விஜயுடன் அவரது 68-வது படத்தில் இணைந்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் பிரசாந்த் பிரபுதேவா,யோகி பாபு, சினேகா, லைலா, அஜ்மல் என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தளபதி விஜய் உடன் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த திரைப்படத்திற்கான கூட்டணியால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது இந்நிலையில் தளபதி ரசிகர்கள் அவரது 68-வது திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் இன்று மாலை வெளியிடப்படும் என தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு . அவரது அறிவிப்பை தொடர்ந்து இன்று மாலை 6:00 மணி அளவில் தளபதி விஜயின் 68 வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் விஜய் விமான பைலட் தோற்றத்தில் இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த போஸ்டரை வைத்து பார்க்கும் போது தளபதி விஜய் டபுள் ஆக்டில் நடித்திருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் சமூக வலைதளத்தில் வெளியான அடுத்த நிமிடமே ட்ரெண்டிங்காக துவங்கி விட்டது.

Tags :
Advertisement