For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை..!! மசோதா தாக்கல்..!!

Minister Muthuswamy introduced the Prohibition Amendment Bill in the Legislative Assembly today.
11:08 AM Jun 29, 2024 IST | Chella
breaking   கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை     மசோதா தாக்கல்
Advertisement

சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தார்.

Advertisement

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை.

இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்திருந்தார். அந்த வகையில், இன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்தார். அதன்படி, கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபாராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Read More : பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..!! அங்கு என்னதான் நடக்கிறது..?

Tags :
Advertisement