For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு..!! குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை..!!

A Sealdah court has found Sanjay Rai guilty in the rape and murder of a medical student in Kolkata.
02:55 PM Jan 20, 2025 IST | Chella
breaking   கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு     குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை
Advertisement

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தின் போது ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்த சந்தீப் கோஷ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது அதை தற்கொலை என பெற்றோர்களிடம் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே அவரசர அவசரமாக கட்டட புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா கோர்ட் தெரிவித்திருந்தது. மேலும், அறிவித்துள்ளது. தண்டனை விவரம் ஜனவரி 20ஆம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அந்த வகையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டுமெனவும், ரூ.50,000 அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Read More : ”புருஷனுக்கு எனக்கும் சண்டையின்னு உன்கிட்ட வந்தா இப்படியா பண்ணுவ”..? ஜோதிடரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பெண்..!! கூடவே வந்த 24 வயது இளைஞர்..!!

Tags :
Advertisement