BREAKING | ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பெரும் சோகம்..!! பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 45 பேர் பலி..!!
தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கு ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மாமட்லகலா அருகே உள்ள பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புகளின் மீது மோதி கீழே இருந்த பள்ளத்தில் சரிந்தது.
தரையில் மோதிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 165 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிருஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், தென்னாப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடான போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.
Read More : Warning | தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம்..? வணிகர் சங்கங்கள் எச்சரிக்கை..!!