#Breaking : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..
மூத்த அரசியல்வாதியும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் இன்று தனது வீட்டில் இறந்தார்.
அவர் அக்டோபர் 11, 1999 முதல் மே 28, 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார், மேலும் 2009 முதல் 2012 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது வெளியுறவு அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றினார்.
பின்னர் எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸுடனான உறவை துண்டித்து 2017 இல் பாஜகவில் சேர்ந்தார். இதன் மூலம் காங்கிரஸுடனான தனது 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டார். இவர் கடந்த ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்
பொது விவகாரங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2023 ஆம் ஆண்டு ராஷ்டிரபதி பவனில் பத்ம விபூஷன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்.எம் கிருஷ்ணாவின் மறைவு கர்நாடாக மட்டுமின்றி இந்திய அரசியலிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : எச்சரிக்கை!. பான் 2.0 புதுப்பிக்க போன், மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம்!. அரங்கேறும் மோசடிகள்!