BREAKING | திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அதிமுக ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனடிப்படையில், இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உத்தரவை, நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் இருவரையும் விடுவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
Read More : 10, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! சூப்பர் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!