முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா..? என்னதான் நடக்கிறது திமுகவில்..? பெரும் பரபரப்பு..!!

Coimbatore Mayor Kalpana has resigned from his post.
04:46 PM Jul 03, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் 3 பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர், மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவியேற்றார். இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்த குமாரின் தலையீடு மிக முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. இதனால் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிதாக நம்பிக்கை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திமுக கட்சி கவுன்சிலர்களுக்கும் இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இது கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : சானியா, கர்மானுக்குப் பின் கோப்பையை வென்ற 3-வது இந்திய வீராங்கனை..!! யார் இந்த சஹாஜா..?

Tags :
கோவை மாநகராட்சிமேயர் கல்பனா
Advertisement
Next Article