BREAKING | மத்திய பட்ஜெட் எதிரொலி..!! தங்கம் விலை ரூ.2,080 குறைந்தது..!! நகைப்பிரியர்கள் செம குஷி..!!
பட்ஜெட்டின் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைந்ததை அடுத்து, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து, 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூபாய் 55,000-ஐ கடந்து விற்பனை ஆனது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், அரசாங்கத்தின் சுங்க வரியும் அதில் ஒன்று. தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தின் சுங்க வரியானது 15% இருந்ததால், தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் பங்குச்சந்தைகளில் தங்கத்தின் முதலீடு போன்ற காரணங்களாலும் தங்கத்தின் விலையானது கணிசமாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில் 2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி விகிதத்தை 15 % என்பதிலிருந்து 6% என்றும் பிளாட்டிணாத்திற்கு சுங்க வரி 6.4% என்றும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ரூ.54,480-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.52,400-க்கு விற்பனையாகிறது. இன்று காலை ரூ.6,810-க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், தற்போது ரூ.260 குறைந்து ரூ.6,550-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.6,825ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.