முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'BREAKING BAD' பாணியில் போதைப்பொருள் தயாரிப்பு கூடம் கண்டுபிடிப்பு..! ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

06:04 AM Apr 28, 2024 IST | Baskar
Advertisement

குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

சமீபகாலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கஞ்சா, ஹெராயின் என உள்நாட்டு போதைப்பொருட்கள் முதல் மெத்தபேட்டைமைன் வரையிலான வெளிநாட்டு போதைப்பொருட்களும் அதிக அளவில் புழங்கி வருகிறது. அண்மையில் 2,500 கிலோ போதைப்பொருட்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திமுக முன்னாள் பிரமுகர் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள் அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர் . அப்போது குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதேபோல், ராஜஸ்தானின் ஜலோர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரம்மாண்டமான போதைப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகள், பிரம்மாண்டமான வேதியியல் ஆய்வகம் போல காட்சியளித்தன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற வெப்சீரீயஸான 'பிரேக்கிங் பேட்' (Breaking Bad) சீரிஸ்லும் இதுபோல தான் போதைப்பொருள் ஆய்வுக் கூடம் காட்டப்பட்டிருக்கும். இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான் போதைப்பொருள் தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ எடையிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகளை அமைத்து, போதைப்பொருட்களை தயாரித்து வருபவர்களை தீவிரவாத தடுப்பு படையினர் தேடி வருகின்றனர். குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More: Amit Shah | “இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…” உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.!!

Advertisement
Next Article