BREAKING | அம்பேத்கர் சிலையை தகர்க்கப் போவதாக மிரட்டல்..!! தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு..!!
08:05 AM Mar 14, 2024 IST | 1newsnationuser6
Advertisement
தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
அம்பேத்கர் சிலைகளை தகர்க்கப் போவதாக தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தீவிரவாத அமைப்பினர் இந்த மிரட்டலை விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : Business | இளைஞர்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!