BREAKING | அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு..!!
மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் நேரில் கருத்து கேட்டது.
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் :
வடசென்னை - ராயபுரம் மனோ
தென் சென்னை - ஜெயவர்தன்
அரக்கோணம் - விஜயன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
விழுப்புரம் - பாக்கியராஜ்
சிதம்பரம் - சந்திரகாசன்
நாமக்கல் - தமிழ்மணி
சேலம் - விக்னேஷ்
கரூர் - கே.ஆர்.என்.தங்கவேல்
கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
ஆரணி - கஜேந்திரன்
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
நாகை - சுர்ஜித் சங்கர்
மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பல அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Read More : மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு..!!