BREAKING | திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம்..!! திருமாவளவன் அதிரடி உத்தரவு..!!
கடந்த 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேலும், இந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை மறைமுகமாக எதிர்த்துப் பேசினார்.
இது அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. திமுகவுக்கு எதிராக இப்படி ஆவேசமாகப் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடப்பதாகவும், பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது என்றும் தெரிவித்தார். இவரது பேச்சு பெரும் பேசுபொருளான நிலையில், அவரை விசிகவில் இருந்து நீக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக குறித்து விமர்சித்ததாக எழுந்த புகாரில் ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்கள் இடைநீக்கம் செய்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். திமுகவை எதிர்த்து பேசி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..!! டோக்கன் எப்போது கிடைக்கும்..?