BREAKING | ’இனி அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!
அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.