முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியார் வசம் ஒப்படைப்பு..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

05:24 PM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்து வரும் நிலையில், இந்த மாமன்ற கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஓராண்டு கொடுப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் இதற்காக ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் போது முறையாக எந்தவிதமான சிரமமும் இல்லாமல் திட்டம் சரியாக நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும், இது மாநகராட்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு மேயர் பிரியா கூறுகையில், சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எனவே, சென்னையில் அதுபோன்றுதான் தனியாருக்கு கொடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இன்று தீர்மானத்திற்கு மாமன்ற கூட்டத்தில் பெருமளவுக்கு ஆதரவு இருந்ததன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags :
காலை உணவுத் திட்டம்சென்னை மாநகராட்சிபள்ளி மாணவர்கள்
Advertisement
Next Article