முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Bread | அடேங்கப்பா..!! 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு..!! மிரள வைக்கும் கண்டுபிடிப்பு..!!

02:33 PM Mar 11, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சுமார் 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வாளர்களால் நம்பவே முடியவில்லை. அந்த ரொட்டி எங்கே எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இப்போது நாம் பயன்படுத்தும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று ரொட்டி. உடம்பு சரி இல்லாமல் போனால் எப்போதும் ரொட்டியைத் தான் தருவார்கள். உலகின் அனைத்து நாடுகளிலும் ரொட்டி பயன்படுத்தப்பட்டே வருகிறது. ரொட்டியை சரியான முறையில் தயாரித்துப் பயன்படுத்தினால், அதை நீண்ட காலம் அப்படியே பாதுகாக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எத்தனைக் காலம் அப்படிப் பாதுகாக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் வரும்.

இந்த கேள்விக்குப் பதிலாகத் துருக்கி நாட்டில் ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் உலகின் பழமையான ரொட்டியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரொட்டி ஏதோ சில மாதங்கள் மட்டும் பழமையானது இல்லை. இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாம். இந்த ரொட்டி கிமு 6600க்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் இந்த பழமையான ரொட்டியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால மண் செங்கல் வீடுகளால் சூழப்பட்ட "மேகன் 66" என்ற பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில், இருந்த மைக்ரோவேவ் அவன் அருகில் இந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரொட்டி வட்டமாகவும் பஞ்சு போலவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை ஆய்வு செய்ததில் அது 8,600 ஆண்டுகள் பழமையான, சமைக்கப்படாத, புளிக்கவைக்கப்பட்ட ரொட்டி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து துருக்கியில் உள்ள அனடோலு பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி உமுட் துர்க்கான் கூறுகையில், "கேடல்ஹோயுக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரொட்டி தான் உலகின் மிகப் பழமையான ரொட்டி. அந்த ரொட்டியின் மிகச் சிறிய அளவு மட்டும் இப்போது வரை இருக்கிறது. இந்த ரொட்டியின் நடுப்பாகத்தில் விரல் அழுத்தம் இருக்கிறது. அந்த ரொட்டி சமைக்கப்படவில்லை.

ஆனால், அது புளிக்கவைக்கப்பட்டு, உள்ளே மாவுச்சத்துகள் இருப்பதால் இப்போது வரை நன்றாக இருக்கிறது. இதுநாள் வரை இதுபோன்ற ஒன்றை யாரும் கண்டுபிடித்ததே இல்லை" என்று தெரிவித்தர். இதை மைக்ரோஸ்கோப் மூலமாகவும் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஸ்கேனிங்கில் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் படங்கள் மாதிரியில் காற்று இடைவெளி இருப்பது தெரிகிறது. மேலும், ஸ்டார்ச் துகள்களும் அதில் உள்ளது. இதன் மூலம் அந்த ரொட்டி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது.

மாவையும், தண்ணீரையும் இணைத்து இதைச் செய்துள்ளனர். அடுப்புக்கு அருகில் இதைக் கொஞ்ச நாட்கள் அப்படியே வைப்பதே அவர்கள் திட்டமாக இருந்துள்ளது. இது துருக்கிக்கும் உலகிற்கும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ரொட்டியின் மேலே களிமண்ணின் மெல்லிய அடுக்கு இருந்துள்ளது. அதுவே இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ரொட்டியை பாதுகாத்து வந்துள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ரொட்டி நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Read More : Ramadan Fasting | தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா ரமலான் நோன்பு..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Advertisement
Next Article