For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரேஷன் கார்டுக்கு பிராண்டட் சரக்கு இலவசம்!… சர்ச்சையை கிளப்பிய பெண் வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி!

07:35 AM Apr 07, 2024 IST | Kokila
ரேஷன் கார்டுக்கு பிராண்டட் சரக்கு இலவசம் … சர்ச்சையை கிளப்பிய பெண் வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி
Advertisement

Election: மக்களவையில் தனக்கு இடம் கிடைத்தால் ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு பிராண்டட் மதுபானங்களை வழங்க எம்பி நிதியில் ஒரு பகுதியை ஒதுக்குவதாக பெண் வேட்பாளர் வனிதா ராவத் உறுதியளித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் வனிதா ராவத் பேசுகையில், வேலையின்மை பிரச்சினை மற்றும் மது அருந்துதல் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் நோக்கத்துடன் வேலையில்லாத இளைஞர்களுக்கு மதுபான ஒப்பந்தங்களை வழங்குவதாக அந்த வேட்பாளர் அறிவித்துள்ளார். வனிதா வழங்கியுள்ள வாக்குறுதியின் முக்கிய அம்சமே மலிவு விலையில், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள தனிநபர்களுக்கு தரமான மதுபானங்களை வழங்க வேண்டும் என்பதே என்று அவர் கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் பெரும்பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளூர் மதுபானங்களை உட்கொள்கின்றனர். அதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே பிராண்டட் மதுபானங்களை மானிய விலையில் வழங்குவதன் மூலம் பின்தங்கிய மக்களின் மனதை குளிர்விப்பதோடு, கண்மூடித்தனமாக மது அருந்துவதால் ஏற்படும் எதிர்மறையான சமூகத் தாக்கங்களைப்பதே நோக்கம் எனவும் கூறியுள்ளார். இந்த வாக்குறுதி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Readmore: தோனியை போலவே ராகுல் காந்தியும் சிறந்த ‘பினிஷர்’!… ராஜ்நாத் சிங் சர்ச்சை பேச்சு!

Advertisement