”இருவரும் மனம் விட்டு பேசுங்கள்”..!! நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி என்ன செய்தார்கள் தெரியுமா..?
நடிகர் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
இருவரும் பரஸ்பரம் பிரிவதாக ஜெயம் ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், விவாகரத்து குறித்து தன்னிடம் ஜெயம் ரவி எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை என ஆர்த்தி பதில் அறிக்கை வெளியிட்டார். மேலும் ஆர்த்திக்கு, ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருக்கிறது. ஆனால், ஜெயம் ரவிதான் பிடிவாதமாக விவாகரத்து செய்ய வேண்டும் என அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கள் திருமணம் செல்லாது என அறிவித்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, இருவரும் ஒரு மணி நேரமாக மத்தியஸ்தர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு அடுத்தாண்டு ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.