For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளை பிரதமர் தமிழகம் வருகை...! மோடி, ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி..!

06:10 AM Jan 01, 2024 IST | 1newsnationuser2
நாளை பிரதமர் தமிழகம் வருகை     மோடி   ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
Advertisement

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி வருகிறார்.

Advertisement

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். நண்பகல் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். விமானப் போக்குவரத்து, ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிற்பகல் 3.15 மணியளவில் லட்சத்தீவின் அகத்தி செல்லும் பிரதமர் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர்களுக்குப் பிரதமர் விருதுகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். ரூ. 1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நிலை புதிய சர்வதேச முனையக் கட்டடம் ஆண்டுதோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சுமார் 3500 பயணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது. புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளன.

Tags :
Advertisement