முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிறந்தது ஆவணி மாதம்..!! இன்று வளர்பிறை சனி பிரதோஷம்..!! முழு பலன்கள் கிடைக்க சிவனை இப்படி வழிபடுங்கள்..!!

As the month of Avani has started today, the first day of this month is the waxing moon Shani Pradosha Day. Now let's see how worshiping on Pradosha Day can get full benefits.
08:30 AM Aug 17, 2024 IST | Chella
Advertisement

இன்று ஆவணி மாதம் துவங்கியிருக்கும் நிலையில், இம்மாதத்தின் முதல் நாளிலேயே வளர்பிறை சனி பிரதோஷ தினமாக பிறந்திருக்கிறது. பிரதோஷ தினத்தில் எப்படி வழிபட்டால் முழு பலன்கள் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

Advertisement

கடவுளை வழிபட அனைத்து நாட்களுமே உகந்த நாள் தான் என்றாலும், நம் கர்மாக்கள் கரைந்தோட கால நேரம் பார்த்து வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் செய்யும் போது அவை சிறப்பான பலன்களை நமக்கு தரும். தாருகாவனத்து ரிஷிகள் கர்வத்தால் தலைகால் புரியாமல் ஆடியபோது சிவபெருமான் பிட்சாடனராக வந்து பாடம் புகட்டினார்.

கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்து முக்தி அடைந்தனர். அதனால் தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமை வரும் பிரதோஷம் தனி மகத்துவம் வாய்ந்தது. சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்வதால், சகல பாவங்களும் விலகி, சகல செளபாக்கியங்களும் பெற்று புகழோடு வாழலாம் என்பது ஐதிகம்.

இந்நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை அள்ளித் தரும். சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடைபெறும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்கள் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜைக்கு நம்மால் முயன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கித் தரலாம். இன்றைய சனிபிரதோஷ நாளில் மாலை 4.30-இல் இருந்து 6 மணி வரை பிரதோஷ வேளையில் சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், 7 தலைமுறை பாவங்களும் நீங்கப் பெறலாம் என்கிறது சிவபுராணம்.

மற்ற பிரதோஷ நாட்களில் சிவ தரிசனம் செய்வதை விட, சனிப் பிரதோஷமான இன்றைய நாளில் தரிசனம் செய்தால், மும்மடங்கு பலன்களைப் பெறலாம் என்பது ஆச்சார்யப் பெருமக்கள் வாக்கு. இன்று சனிப் பிரதோஷ நாளில் மாலையில் சிவ தரிசனம் செய்வோம். சிவாயநம சொல்லுவோம். சகல பாவங்களில் இருந்து விலகுவோம்.

Read More : இந்த பழக்கம் உங்ககிட்ட இருக்கா..? இதிலிருந்து விடுபட்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம்..!!

Tags :
ஆவணி மாதம்சிவன்வளர்பிறை சனி பிரதோஷம்
Advertisement
Next Article