முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”பொண்டாட்டியே போய்ட்டா”..!! ”இனி இது எதுக்கு”..? மனைவியை பிரிந்த விரக்தியில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன்..!!

In a family dispute, the wife went to her mother's house in anger, and the husband cut off his penis in frustration.
01:49 PM Nov 08, 2024 IST | Chella
Advertisement

குடும்ப தகராறில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு மனைவி சென்ற நிலையில், விரக்தியில் ஆணுறுப்பை கணவன் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சேலம் மாவட்டம் வீராணம் அருகே டி.பெருமாபாளையம் குள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, முருகனின் மனைவி மற்றும் குழந்தைகள், சில ஆண்டுகளுக்கு முன் சூரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இதனால் முருகன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சம்பவத்தன்று முருகன் திடீரென தனது ஆணுறுப்பை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது வலி தாங்காமல் அலறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை பிரிந்த வேதனையில் கூலித்தொழிலாளி தனது ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!! வட்டி தொகை மட்டுமே உங்களுக்கு எவ்வளவு வரும் தெரியுமா..?

Tags :
ஆணுறுப்புகணவன் - மனைவிகாவல்துறைசேலம் மாவட்டம்
Advertisement
Next Article