கிருத்திகா ஸ்டாலின் பெயரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! தீவிர விசாரணையில் காவல்துறை.!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் திரைப்பட இயக்குனருமான கிருத்திகா ஸ்டாலின் பெயரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி ரித்திகா ஸ்டாலின் பெயரில் போலியான மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் போதைப் பொருள் கடத்தல் உனக்குள் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் கிருத்திகா ஸ்டாலினை தொடர்பு படுத்தி நடவடிக்கை எடுத்தால் பள்ளிகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என எழுதப்பட்டுள்ளது. அல்பாதர் என்ற அமைப்பின் பெயரில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மின்னஞ்சல் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போதை பொருள் தடுப்பு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் ஜாபர் சாதிக்குடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினரை இணைத்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மனைவியின் பெயரில் பள்ளிகளுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.