For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"என்னா அடி…" செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவனை தாக்கிய பாலிவுட் நடிகர்…! வெளியான வீடியோவால் பரபரப்பு.!

07:12 PM Nov 15, 2023 IST | 1Newsnation_Admin
 என்னா அடி…  செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவனை தாக்கிய பாலிவுட் நடிகர்…  வெளியான வீடியோவால் பரபரப்பு
Advertisement

பாலிவுட் பிரபலமான நடிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

பாலிவுட் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா பட்டேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு 'மீ டூ' சர்ச்சையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது புதிய படப்பிடிப்பு உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பின் போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நானா பட்டேகர்.

படப்பிடிப்பு தளத்திலிருந்த நானா பட்டேகருடன் செல்ஃபி எடுக்க முயன்று இருக்கிறார் ஒரு சிறுவன். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவர் அந்த சிறுவனின் தலையில் அடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பிற்காக அருகிலிருந்த பாடிகார்ட் அந்த சிறுவனின் கழுத்தைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றுகிறார்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். இது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாலிவுட் நடிகருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement