அழகை மேம்படுத்தும் முட்டை..! இப்படி சாப்பிட்டால் இதயத்தையும் பாதுகாக்கலாம்.!
நீரில் வேகவைத்து முட்டையில் நிறைய ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. இது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சியினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. ஏனெனில் வேகவைத்த முட்டை வெப்பத்தின் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
ஒரு வேகவைத்த முட்டையில் வைட்டமின் பி6, பி12 மற்றும் துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இது சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வேக வைத்த முட்டையில் விட்டமின் டி இருக்கிறது எனவே இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதில் உடலுக்கு தேவையான புரோட்டின் அதிக அளவில் இருப்பதால் முட்டையை உணவாக எடுத்துக் கொள்ளும்போது, மற்ற அதிகப்படியான உணவு தேவையை இது போக்குகிறது. இதன் மூலம் நாம் குறைவாக சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியும். நம் உடலுக்கு தேவையான ஆற்றலை இது வழங்குகிறது
மழை, குளிர்காலத்தில் பலருக்கும் நடைப்பயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்வது சவாலான விஷயமாக இருக்கும். முட்டையில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன் எடை இழப்புக்கு காரணமாக இருக்கும். இதில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கோலின் உள்ளது. மூளை வளர்ச்சிக்கு தேவையான சமிக்ஞைகளை அளிக்கும். எனவே வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு இன்றியமையாத உணவு.
முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு கண்களை பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பயோட்டின், செலினியம் முட்டையில் இருப்பதால் இவை சரும அழகை மேம்படுத்துவதுடன், முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். என்ற முக்கிய பகுதி உள்ளது, மேலும் முட்டைகள் இந்த ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த முட்டையில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இது இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முட்டை ஒரு இன்றியமையாத வரப்பிரசாதம். இதில் உள்ள செலினியம் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.