NASA | மே-6ல் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருடன் முதல் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் போயிங் ஸ்டார்லைனர்...
NASA: நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் தனது முதல் குழு விமானத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் மே 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த செய்தியை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
விண்வெளி பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் போயிங் ஸ்டார்லைனர் விமான நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. போயிங் தி ஸ்டார்லைனர் விண்கலத்தை விண்வெளி ஏவுதள வளாகம்-41 இல் உள்ள வெர்டிகள் ஒருங்கிணைப்பு வசதிக்கு கொண்டு செல்லப்பட்டு ULA ஏவுகணையின் அட்லஸ் V ராக்கெட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
குழுவினருடன் விண்வெளிக்கு செல்ல இருக்கும் முதல் விமானமான போயிங் ஸ்டார் லைனர் வருகின்ற மே 6ஆம் தேதி கேப் கனாவரலில் உள்ள விண்வெளி ஏவுகணை வளாகம்-41 இல் இருந்து இரவு 10:34 மணிக்கு முன்னதாக ஏவப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளது என நாசா(NASA) தனது சமூக வலைதள பதிப்பில் தெரிவித்திருக்கிறது.
NASA விண்வெளி வீரர்கள் மற்றும் சோதனை விமானிகள் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை சுமார் 10 நாள் பயணத்தில் அனுப்புவதை CFT நோக்கமாகக் கொண்டுள்ளது, இது ஸ்டார்லைனர் அமைப்பின் திறன்களை நிரூபிக்கும்.
போயிங் நிறுவனம் ஸ்டார் லைனருடன் விண்வெளிக்கு சென்று நாசாவின் பணிகளுக்கு உதவுவதாக 2014 ஆம் வருடம் நாசா வணிக குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. குழு விமான பயணங்களை விண்வெளிக்கு மேற்கொள்வதில் பல தடைகள் ஏற்பட்டன . 2019 ஆம் வருடம் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கடின முயற்சிக்குப் பிறகு 2022-ல் காப்ஸ்யூல் அந்தப் பணியை சிறப்பாக செய்து முடித்தது .
தற்போதைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தால் மேலும் 4 விண்வெளி வீரர்களை போயிங் ஸ்டார்லைனர் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் அல்லது விண்வெளி வீரர்களின் குழு மற்றும் கார்கோ சேவைகளை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும்.