37 வயதில் பிரதமரான போடோங்டர்ன்!. பெரும்பான்மை வாக்குகள் பெற்று தாய்லாந்து பிரதமராக தேர்வு!.
Thailand PM: 37 வயதில் தாய்லாந்து நாட்டின் பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் போடோங்டர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது பிரதமர் ஷெரத்தா, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 6 மாதங்கள் சிறையில் இருந்த பிக்சிட் என்பவருக்கு அமைச்சர் பதவியை வழங்கினார். பிரதமரின் இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த அரசியலமைப்பு நீதிமன்றம் பிரதமர் ஷெரத்தாவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து புதிய பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் போடோங்டர்ன்(37) அறிவிக்கப்பட்டார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மை வாக்குகளை அவர் பெற்றதை அடுத்து பிரதமராக போடோங்டர்ன் தேர்வு செய்யப்பட்டார்.
Readmore: ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும்..!! – அமித்ஷா, ஹரியானா முதல்வர் நம்பிக்கை..!!