முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஏரியில் படகு கவிழ்ந்து உயிரிழப்பு...! தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை அறிவித்த பிரதமர் மோடி...!

06:10 AM Jan 20, 2024 IST | 1newsnationuser2
Advertisement

குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

Advertisement

இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியதாவது; வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
gujaratnarendra modiPMOrelief fund
Advertisement
Next Article