For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

படகு கவிழ்ந்து விபத்து: கடலில் மூழ்கி பலியான 90 பேர்!

11:47 AM Apr 08, 2024 IST | Mari Thangam
படகு கவிழ்ந்து விபத்து  கடலில் மூழ்கி பலியான 90 பேர்
Advertisement

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில், படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில், மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கும் போது படகு மூழ்கியுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது, “படகில் அதிகம் பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பலர் சிறார்கள். இதுவரை ஐவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கடலின் சீற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் இந்த விபத்துக்கான காரணம் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகின் மிகவும் ஏழ்மை நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணமே காலராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபகுதி நம்புலா பகுதியை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

Tags :
Advertisement