படகு கவிழ்ந்து கோர விபத்து!. 50க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலி!. ஸ்பெயினுக்கு செல்ல முயன்றபோது நிகழ்ந்த சோகம்!
Boat capsizes: மொராக்கோ அருகே 80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு செல்ல முயன்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி மொரிட்டானியாவிலிருந்து 66 பாகிஸ்தானியர்கள் உட்பட 86 புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட அந்த படகு மொராக்கோ அருகே சென்றுக்கொண்டிருந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். படகிலிருந்து 36 பேரை மொராக்கோ அதிகாரிகள் மீட்டுள்ளனர். நீரில் மூழ்கியதாகக் கருதப்படுபவர்களில் 44 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 13 நாட்கள் பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிர் பிழைத்தவர்களில் பலர் தக்லா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவலில், விபத்தில் சிக்கிய படகில் 80 பயணிகள் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் தேதியே தொடர்புடைய படகு குறித்து ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவை பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அருகிலுள்ள கப்பல்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ல் ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட புலம்பெயர் மக்களில் 10,457 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியா 30 பேர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது புதிய ஏவுதளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்…!