குளிர்காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம்.. ஆனா இதை ஃபாலோ பண்ணா ஈஸியா குறைக்கலாம்..
குளிர்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. எனவே உங்கள் ரத்த அழுத்த அளவுகள் சீராக இருப்பதை உறுதி செய்வது அவசியம்.. ரத்த அழுத்தம் பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாகவும், கோடையில் குறைவாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் குறைந்த வெப்பநிலை இரத்த நாளங்கள் தற்காலிகமாக சுருங்கும் எனவும், வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் ரத்த அழுத்த அளவும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் உடலில் உள்ள ரத்த நாளங்கள், ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், அல்லது வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு எதிர்வினையாற்றும். அதை போலவே குளிர்காலத்திலும் உங்கள் உடல் எதிர்வினையாற்றும். எனவே, குளிர்காலத்தில் உங்கள் ரத்த அழுத்த அளவைப் பராமரிக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
உப்பு உட்கொள்ளலை குறைப்பது : அதிக உப்பு சாப்பிடுவது, குறிப்பாக குளிர்ந்த காலநிலையில், உயர் ரத்த அழுத்தம் உயர்வதற்கு வழிவகுக்கும். எனவே, சோடியத்தை கட்டுப்படுத்துவது முக்கியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு இருக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.. உணவு லேபிள்களை கவனமாக படிக்கவும்
உடற்பயிற்சி செய்யுங்கள் : குளிர்காலத்தில் நீங்கள் சோர்வாகவும், பலவீனமாகவும் உணரும்போது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது முக்கியம். உயர் இரத்த அழுத்தத்தின் பாதகமான விளைவுகளைத் தடுக்க உடற்பயிற்சிகள் மிகவும் பயனுள்ள வழி ஆகும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உங்களால் வெளியே செல்ல முடியாவிட்டால், டிரெட்மில்லில் நடப்பது, யோகா போன்றவற்றை செய்யலாம்.
புகைபிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது
புகைபிடித்தல் உங்கள் ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது, இது உங்கள் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கிறது. மேலும், மது அருந்துவது, குறிப்பாக குளிர் காலநிலையில், ரத்த அழுத்தத்தில் தற்காலிக அதிகரிப்பை ஏற்படுகிறது. இந்த இரண்டு பழக்கங்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..