பழிக்குப் பழி!. நெதன்யாகு வீட்டில் ட்ரோன் அட்டாக்!. ஒழித்து கட்டும் வரை ஓயமாட்டோம்!. உச்சக்கட்ட கோபத்தில் பிரதமர்!
Netanyahu: என் மீது நடைபெற்ற கொலை முயற்சி மிகப்பெரும் தவறான செயல் என்றும் பயங்கரவாதிகளையும் அவர்களை அனுப்புவர்களையும் நாங்கள் ஒழித்து கட்டுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதராவக லெபானானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல, காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். இதனால், ஹமாஸ் அமைப்பினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிசேரியாவில் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
டிரோன் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "என் மீதும், எனது மனைவி மீது நடைபெற்ற கொலை முயற்சி மிகப்பெரும் தவறான செயலாகும். இப்படி செய்வதால் என்னையோ இஸ்ரேல் முன்னெடுத்து வரும் எதிரிகளுக்கு எதிரான சண்டையை முடக்கி விடாது. இஸ்ரேல் மக்களை துன்புறுத்த யாராவது முயற்சித்தால் கடும் விலையை கொடுக்க நேரிடும்.
காசாவில் இருந்து எங்களின் பணையக்கைதிகளை நாங்கள் மீட்போம். வடக்கு எல்லையில் வசித்த எங்கள் நாட்டு மக்களுக்கு அவர்களின் வீடுகளை பத்திரமாக திரும்பி ஒப்படைப்போம். போர் தொடர்பான எங்களின் எல்லா இலக்குகளையும் பூர்த்தி செய்ய இஸ்ரேல் உறுதியாக உள்ளது. எதிர்கால தலைமுறைகளுக்கு நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரத்தை மாற்றுவோம். பயங்கரவாதிகளையும் அவர்களை அனுப்புவர்களையும் தொடர்ந்து நாங்கள் ஒழித்து கட்டுவோம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Readmore: நீங்கள் அதிகமாக ஆப்பிள் சாப்பிடுபவரா..? பல நோய்கள் ஏற்படும் அபாயம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!