முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கருப்புப் பண விவகாரம்!. 'மஞ்சும்மல் பாய்ஸ்' பிரபலத்திடம் ED விசாரணை!.

Black money issue! ED inquiry to 'Manjummal Boys' celebrity!.
08:56 AM Jun 16, 2024 IST | Kokila
Advertisement

'Manjummal Boys': 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சவுபின் சாஹீரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

சிதம்பரம் இயக்கத்தில், மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலை படைத்த மஞ்சுமல் பாய்ஸ் படம், கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளித்திரையில் மின்னியது. இப்படத்தை, பரவா பிலிம்ஸ் என்ற பெயரில் சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். சவுபின் ஷாஹிர் தயாரிப்பாளராக மட்டுமின்றி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜொலித்தார். கேரளா மட்டும் இன்றி தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில்,இந்தப் படத்தில் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி தரவில்லை என்றும் சிராஜ் என்பவர் வழக்குத் தொடுத்தார். இதன் அடிப்படையில் விசாரித்த போலீஸார், தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும், தயாரிப்பு செலவு ரூ. 18.65 கோடி என்ற நிலையில், ரூ.22 கோடி என்று பொய்யாகத் தெரிவித்துள்ளனர் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தனர்.

இதில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து அவர்களும் விசாரணையை தொடங்கினர். சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சவுபின் சாஹிரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பல மணி நேர விசாரணைக்கு பின் அவரை விடுவித்த அதிகாரிகள், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

Readmore: உஷார்!. விடுதி உணவில் பாம்பு வால்!. மாணவர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Tags :
'Manjummal Boys'Black money issueED inquirySaubin Shahir
Advertisement
Next Article