18 முதல் 24 வயதுடைய வாக்காளர்களுக்கு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்...!
18 முதல் 24 வயதுடைய வாக்காளர்களுக்கு குடிமைத் தேர்வை எழுதி வெற்றி பெற்று இருக்க வேண்டும் என குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டிபோட உள்ளார். இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு குறித்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி 18 முதல் 24 வயதுடைய வாக்காளர்களுக்கு குடிமைத் தேர்வை எழுதி வெற்றி பெற்று இருக்க வேண்டும், அல்லது 6 மாதம் ராணுவத்தில் சேவை செய்திருக்க வேண்டும். இதன் மூலம் இளம் வாக்காளர்களுக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தும் என்று ராமசாமி பரிந்துரை செய்துள்ளார்.
இருப்பினும், சில கறுப்பின அமெரிக்கர்கள் ராமசாமியின் முன்மொழிவுக்கும் வாக்களிக்கும் உரிமையை மறுக்கப் பயன்படுத்தப்படும் என கூரிய தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். உள்நாட்டுப் போருக்குப் பிறகு சில தென் மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள் கடினமானதாகவும், பாரபட்சமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது குறைந்த கறுப்பின வாக்காளர் பதிவுக்கு பங்களித்தது.