ஜம்மு காஷ்மீர் | சூரன்கோட் பாஜக வேட்பாளர் சையத் முஷ்டாக் புகாரி காலமானார்..!!
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சூரன்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய சையது முஷ்டாக் புகாரி காலமானார். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் தொகுதியின் பாஜக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சையத் முஷ்டாக் புகாரி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 2024 சட்டமன்றத் தேர்தலில் ஜம்முவில் உள்ள சூரன்கோட்டில் 75 வயதான புகாரியை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.
புகாரி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட்டில் முன்னாள் அமைச்சரும், இரண்டு முறை முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தவர். ஒரு காலத்தில் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டார். புகாரி கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தேசிய மாநாட்டில் இருந்தார். பிப்ரவரி 2022 இல், பஹாரி சமூகத்திற்கான எஸ்டி அந்தஸ்து குறித்து ஃபரூக் அப்துல்லாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புகாரி கட்சியிலிருந்து பிரிந்தார்.
அதன் பிறகு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் பாஜகவில் சேர்ந்தார். ஜம்முவில் உள்ள பாஜக தலைமையகத்தில், மாநிலத் தலைவர் ரவீந்திர ரெய்னா அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை வழங்கினார், அதன் பிறகு பாஜக அவரை சூரன்கோட்டில் வேட்பாளராக்கியது குறிப்பிடத்தக்கது.
Read more ; சீராகத் தேறிவருகிறார்.. மக்களின் நல்லன்பு நிச்சயம் மீட்டெடுக்கும்..!! – ரஜினிக்கு வைரமுத்து போட்ட ட்வீட்