முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்கும் பாஜகவின் முயற்சி...! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு...!

BJP's attempt to freeze assets of Waqf Board
07:32 AM Aug 09, 2024 IST | Vignesh
Advertisement

இஸ்லாமிய சமுதாயத்தினரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பலவிதமான சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்கும் பாஜகவின் முயற்சி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது. முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.

வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKBJPedappadiWaqf act
Advertisement
Next Article