முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்களே கிடைக்கும்" - ராகுலின் கணிப்பு பலிக்குமா?

12:47 PM Apr 17, 2024 IST | Mari Thangam
Advertisement

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ரு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, "15 – 20 நாள்களுக்கு முன்பு வரை வெற்றி குறித்து கணிக்கவில்லை,  180 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று கணித்தேன்.  ஆனால் தற்போதைய நிலவரப்படி 150 தொகுதிகளிலேயே பாஜக வெல்லும்.  இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி பலமாக உள்ளது. ” எனத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை மோடி குறைத்துவிட்டார். வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவதே எங்களின் முதல் பணியாகும். அதற்காக 23 யோசனைகளை எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதில் ஒன்று பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி வழங்கும் யோசனை.  பயிற்சி எடுக்கும் இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே தேர்தல் பத்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இத்திட்டம்தான் உலகிலேயே மிகப்பெரிய கொள்ளையடிக்கும் திட்டம் என்பது இந்திய தொழிலதிபர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த விஷயத்தில் பிரதமர் எவ்வளவுதான் தெளிவுபடுத்தினாலும், ஊழலின் சாம்பியன் பிரதமர் என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் தெரியும்." என்று தெரிவித்தார்.

Tags :
#BjpCONGRESSINDIA allaianceParliment electionRahul gandhi
Advertisement
Next Article