முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இந்த முறை பாஜக வீட்டுக்கு போவது கன்ஃபார்ம்"... தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து மல்லிகார்ஜுனா கார்கே பேச்சு.!

02:52 PM Feb 20, 2024 IST | 1newsnationuser7
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் ஆட்சியை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் திமுக ஆம் ஆத்மி சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற இந்தியாவின் முக்கியமான கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பொது மக்களிடம் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பாரத் ஜோதா யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கிய இவரது யாத்திரை தற்போது உத்திர பிரதேசத்தை அடைந்திருக்கிறது. உத்திர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் அதிக பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒரே ஒரு சீட்டை மட்டுமே வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்களின் பாரம்பரிய தொகுதியான ரெபரெலி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி ஸ்மிருதி இராணி இடம் தோல்வி அடைந்தார். இந்த முறை கண்டிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே " பாரதிய ஜனதா கட்சி வேண்டுமென்றே காங்கிரசின் பாரம்பரிய தொகுதிகளுக்கான நலத்திட்ட உதவிகள் எதையும் வழங்காமல் பழிவாங்குவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் நாட்டை பாரதிய ஜனதா கட்சி கொண்டாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 400 தொகுதிகளில் அவர்களது கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியால் 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். வாய்ஜாலங்களால் மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவும் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்து இருக்கிறார்.

English Summary: Congress president Mallikharjuna Karge expressed that bjp will get only 100 seats and they will be uprooted from rule.

Tags :
BJPCONGRESSMallikarjuna KargemodiRahul gandhiuttar pradesh
Advertisement
Next Article