" 370 தொகுதி கன்ஃபார்ம்.. அடுத்த 5 வருட பாஜக ஆட்சி.. 1000 வருட வளர்ச்சிக்கு வித்திடும்."! பிரதமர் மோடி எழுச்சி உரை.!
2019 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த உரை தொடர்பான பதில் விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வர இருக்கின்ற தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்
இது தொடர்பாக பேசிய அவர் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வர இருக்கின்ற தேர்தலில் நான் ஒரு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனி பலத்துடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார் . பாரதிய ஜனதா கட்சி மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். மேலும் அடுத்த ஐந்தாண்டுகள் நடைபெற இருக்கும் பாரதிய ஜனதாவின் ஆட்சி இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சிக்கு வித்திடும் இடம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது. மேலும் ராமர் கோவில் திறப்பு விழா போன்றவை வடநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவிழந்ததாக காணப்படுகிறது. ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளர் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன் முட்டி வருகிறது. இதனால் பிரதமர் மோடியின் நம்பிக்கை நிஜமாகும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.